உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் முன் கழிவுநீரால் பக்தர்கள் முகம் சுளிப்பு

கோவில் முன் கழிவுநீரால் பக்தர்கள் முகம் சுளிப்பு

ஆத்துார் :முத்துமலை முருகன் கோவில் முன் வழிந்தோடும் கழிவுநீரால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகில் உயரமான, 146 அடி உயர சுவாமி சிலை உள்ளது. இதனால் தினமும் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆனால் ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து, 15வது வார்டு குடியிருப்புகளின் கழிவுநீர், கோவில் வளாக நிழற்கூட பகுதியில் இருந்து, கோவில் முகப்பின் நுழைவு பகுதியில் வழிந்தோடுகிறது. அங்கேயே பல நாட்களாக தேங்குவதால் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.அந்த வழியே செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள், கழிவுநீர் மீது செல்லும்போது, நடந்து செல்லும் பக்தர்கள் மீது தெறிக்கிறது. முகம் சுளித்தபடியே, அப்பகுதியை பக்தர்கள் கடக்கின்றனர். கழிவுநீரை அகற்றி மீண்டும் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் கூறியதாவது:நிழற்கூட பகுதியில் இருந்த சாக்கடை இணைப்பு உடைந்ததால், கழிவுநீர் கோவில் பாதையில் செல்கிறது. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை