உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜி.ஹெச்.,ல் தவறான ஊசி செலுத்தி ஒருவர் சாவு?

ஜி.ஹெச்.,ல் தவறான ஊசி செலுத்தி ஒருவர் சாவு?

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிலர், பொது அறுவை சிகிச்சை, ஆண்கள் பிரிவில் அனுமதிக்கப்-பட்டிருந்தனர். அவர்களுக்கு, நேற்று இரவு பணியில் இருந்த மருத்துவர், ஊசி போட்டார். இதில், ஒவ்வாமை, உடல் நடுக்கம் ஏற்பட, உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவர், டீன் தேவி மீனாளுக்கு தகவல் கொடுத்தார். அவர் உள்ளிட்ட மருத்-துவ குழுவினர் விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட, 7 நோயாளி-களை, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி, மருத்துவமனை போலீசார் விசாரித்-தனர்.போலீசார் கூறுகையில், 'விசாரணையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மங்களபுரத்தை சேர்ந்த வேணுகோபால், 40, உள்பட, ௭ பேர் ஊசி போடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். இதில் வேணு-கோபால் இறந்ததாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்-ளது. இருப்பினும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தாததால், உறவி-னர்கள் தவித்து வருகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை