உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

ஏற்காடு, மாவட்டம் முழுவதும் உள்ள, 35 போலீசார், 25 ஆயுதப்படை போலீசாருக்கு சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளியில் இருந்து, எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையில் கடந்த, 5ல் தொடங்கி மூன்று நாட்கள் பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில், இரண்டாம் நாளான நேற்று ஏற்காடு படகு இல்ல ஏரியில், போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மழை காலங்களில் மரங்கள் விழுந்தால் அதை எவ்வாறு அகற்றுவது, கட்டட இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்களை எப்படி மீட்பது, நீர்நிலைகளில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் நீர் நிலைகளில் எவ்வாறு நீச்சல் அடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ