சரக்கு இறக்குவதில் தகராறு:லாரி உரிமையாளர் கைது
மேட்டூர்;கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 44. நவப்பட்டி ஊராட்சி நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் குமார், 47. இருவரும் லாரி உரிமையாளர்கள். கடந்த, 29 இரவு, 8:15 மணிக்கு, செந்தில்குமார், அவரது நண்பரை பார்க்க மேட்டூர் மாதா ஆலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார், 'சதுரங்காடியில் உள்ள கடைக்கு நீ ஏன் சரக்கு இறக்குகிறாய். நான்தான் இறக்குவேன்' என கூறினார். தொடர்ந்து வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. குமார், கல்லை எடுத்து செந்தில்குமார் தலைமையில் அடித்துள்ளார். காயம் அடைந்த அவர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி மேட்டூர் போலீசார், நேற்று குமாரை கைது செய்தனர்.