மேலும் செய்திகள்
திருமாவளவன் பிறந்தநாள் 100 மரக்கன்று வழங்கல்
18-Aug-2024
விஜயகாந்த் பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கல்
27-Aug-2024
சேலம்: தே.மு.தி.க.,வின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், 2வது அக்ர-ஹாரம் காசி முனியப்பன் கோவில் தெருவில், கட்சி நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிச்-சிப்பாளையம் பகுதி செயலர் விஜய் தலைமை வகித்தார்.அதில் மாநகர மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், விஜயகாந்த் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தி, கட்சி கொடி ஏற்-றினார். பின் அப் பகுதியில் உள்ள, 100 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா வழங்கப்பட்டன. தொடர்ந்து, 200 பேருக்கு இலவச வேட்டி, சேலை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 32வது கோட்ட செயலர் விஸ்வா, பகுதி அவைத்தலைவர் செல்வம், மாநகர் மாவட்ட துணை செயலர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
18-Aug-2024
27-Aug-2024