உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க.,வினர் - ஓமலுார் போலீசார் மீது அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் புகார்

தி.மு.க.,வினர் - ஓமலுார் போலீசார் மீது அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் புகார்

சேலம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான, சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி ராஜமுத்து, ஓமலுார் மணி, வக்கீல் பிரிவு மாநில துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் அனில்குமார் கிரியிடம் நேற்று அளித்த மனு:தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார், கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி தலைவரின் கணவர் முத்துக்குமார். இவர் கடந்த மாதம், 21ல் பச்சினம்பட்டி பிரிவு சாலையில், பொக்லைன் மூலம் ஆபத்தை ஏற்படுத்தும்படி பள்ளம் தோண்டினார். இதுகுறித்து மக்கள் கேட்டதற்கு, 5 பேரை தாக்கியுள்ளார். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இந்நிலையில் முத்துக்குமார் அடிபட்டதாக, பொய்யாக மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது புகார் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த போலீசார், வேலாக்கவுண்டனுாரை சேர்ந்த அன்பழகன் என்பவரை, விசாரணை பெயரில் நள்ளிரவில் வீடு புகுந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.கடந்த, 2ல், தி.மு.க.,வை சேர்ந்த, மாவட்ட முன்னாள் கவுன்சிலரான சண்முகம், கொடுத்த பணத்தை கேட்ட முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முருகன் அளித்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஓமலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., ஆகியோர், ஆதாயத்திற்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அதனால் ஓமலுார் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !