உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறுந்து விழுந்த மின் கம்பி போக்குவரத்து பாதிப்பு

அறுந்து விழுந்த மின் கம்பி போக்குவரத்து பாதிப்பு

அறுந்து விழுந்த மின் கம்பிபோக்குவரத்து பாதிப்புஆத்துார், நவ. 16-ஆத்துார், மந்தைவெளி வழியே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதன் குறுக்கே இருபுறமும் உள்ள மின் கம்பத்தில் இருந்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அந்த வழியே, 'டாடா - சபாரி' காரை ஓட்டி வந்த டிரைவர் பாலு, உடனே காரை நிறுத்தினார். இதில் அவர், வி.சி., முன்னாள் நகர செயலர் செல்வம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஆத்துார் மின்வாரிய அலுவலர்கள், டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.சாலை இருபுறமும் வாகனங்கள் செல்லவில்லை. அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்து, மின் கம்பத்தில் மீண்டும் கட்டினர். இச்சம்பவத்தால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு, 9:30 மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'மழையால் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. உடனே பார்த்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ