மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
14-May-2025
ஆத்துார்: திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.சேலம் மாவட்டம் ஆத்துார், தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஏப்., 27ல் தொடங்கியது. நேற்று மதியம், 3:50 மணிக்கு, துளுவ வேளாளர் மகாஜன மன்ற தலைவர் கண்ணன், கோவில் திருப்பணிக்குழு தலைவர் ஸ்ரீராம், விழா குழுவினர், தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள், தேரை இழுத்தனர். மழையிலும் உற்சாகம்தர்மராஜர், அர்ஜூனன், திரவுபதி அம்மன் சுவாமிகள், தங்க கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை, 5:00 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தபோதும், கடைவீதி வழியே பக்தர்கள் உற்சாகத்துடன், தேரை இழுத்து வந்தனர். 6:00 மணிக்கு, தேர் கோவிலை அடைந்தது. முன்னதாக பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும்படி, கோலாட்டம், பொய்க்கால் நடனம், பூங்கரகம், கரகாட்டம் ஆடியபடி பலர் ஊர்வலமாக வந்தனர். சிலர், அம்மன், காளி, சிவன் வேடமணிந்து பங்கேற்றனர். திருவிழாவை ஒட்டி மூலவர், கன்னியாகுமரி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு, முஸ்லிம் சமுதாயத்தினர், மோர், குடிநீர் வழங்கினர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
14-May-2025