உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திரவுபதி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்

திரவுபதி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்

திரவுபதி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்சேலம் மாவட்டம் ஆத்துார் வசிஷ்ட நதி, தென்கரையில் உள்ள தாயுமானவர் தெருவில், பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த, 1922ல், கோவில் புனரமைப்பு செய்து, திரவுபதி அம்மன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு தீ மிதி பெருவிழா, திருத்தேர் திருவிழா பிரபலம். நடப்பாண்டு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, பக்தர்கள், தினமும் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.இதுகுறித்து கோவில் திருப்பணிக்குழு தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:திரவுபதி அம்மனுக்கு, ஆத்துாரில் பழங்காலம் முதல் கோவில் உள்ளது. மகாபாரதத்தின் நாயகி திரவுபதி. துருபதன் என்ற மன்னன், பாஞ்சால தேசத்தில் ஆட்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கு வாரிசு இல்லை. அவர், வாரிசு வேண்டியும், துரோணரை அழிப்பதற்காகவும், யாகம் செய்தார். யாகத்தில் தோன்றிய மகனுக்கு துஷ்டத்துய்மன், மகளுக்கு திரவுபதி என்றும் பெயரிட்டார்.திரவுபதி, முற்பிறவியில் நளாயினியாக பிறந்தவள். மறுபிறவியில் காசி ராஜனுக்கு மகளாக பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவளது தவத்தை கண்டு, சிவபெருமான் தோன்றினார். அவள், 'பதம் தேஹி' என, 5 முறை கூறினாள். 'மறுபிறவியில் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்' என, சிவபெருமான் அருள்புரிந்தார்.திரவுபதி, கன்னி பருவம் அடைந்ததும், சுயம்வரம் மூலம் அர்ஜூனனை மணந்தாள். பின் அர்ஜூனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள், குந்தி தேவியை சந்திக்கச்சென்றனர். பஞ்ச பாண்டவர்கள், வீட்டு வாசலில் நின்றபடி, 'தாயே... கனி கொண்டு வந்துள்ளோம்' என கூறினர். குந்திதேவி திரும்பி பார்க்காமல், 'பகிர்ந்து உண்ணுங்கள்' என்றார். பின், கனிக்கு பதிலாக, திரவுபதி இருப்பதை கண்ட குந்திதேவி பதறினாள்.இந்நிலையில் குந்தியின் முன் தோன்றிய நாரதர், 'திரவுபதி முற்பிறவியல் சிவனை வேண்டி தவம் இருந்த பலனாக, 5 சிவ கணங்களும், அவருக்கு கணவர்களாக இப்போது வாய்த்துள்ளனர்' என்றார். திரவுபதியும், 5 பேரையும் சிவசக்தியாக மணந்து, பராசக்தியாக வாழ்ந்தாள். பாரதப்போர் நடந்தபோது, பஞ்சபாண்டவர்களுக்கு, 'திரவுபதி காளியின் வடிவம்' என்பதை, கண்ணன் உணர்த்தினார்.கவுரவர்களிடம் நடந்த போரில் பாண்டவர்கள் வென்ற பின், கூந்தலை முடிவதாக சபதம் செய்தாள் திரவுபதி. இப்படி தெய்வ சக்தியாக வாழ்ந்த திரவுபதிக்கு, நாட்டில் நிறைய கோவில்கள் இருந்தாலும், ஆத்துார் திரவுபதி அம்மன், அருள் தரும் அரசியாக அருள்பாலித்து வருகிறார். திரவுபதியை வழிபட்ட பின் மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சமுதாய மக்களும் பொங்கல் வைத்து வழிபடும் கோவிலாக உள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஏப்., 26ல் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கியது. ஏப்., 27ல் அம்மனுக்கு மஹா அபிேஷகம் செய்யப்பட்டது. மே, 2ல் திருவிளக்கு பூஜை, 6ல், புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வந்த புனித நீரை, தீர்த்தக்குட ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு செய்யப்பட்டது. 9ல் மஹா சாந்தி ேஹாமம், நேற்று பால் குட ஊர்வலம் நடந்தது. இன்று அம்மன் திருக்கல்யாணம், நாளை அம்மன் துகில் தருதல் நிகழ்ச்சி, 16ல் தீ மிதி திருவிழா, 17ல் தேர் திருவிழா, 20ல் போர் மன்னன் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, துளுவ வேளாளர் மகாஜன மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.அழைப்பிதழ் வழங்கல்அருள் அரசி திரவுபதி அம்மன், அர்ஜூன மகாராஜவுக்கும், இன்று காலை, 9:30 முதல், 10:00 மணிக்குள், நவநீதகிருஷ்ணரின் துணைகொண்டு, தர்மராஜர் சன்னதியில், திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்போர், பாதகாணிக்கை (மொய் செலுத்துதல்) செலுத்தி, அம்மன் அருள் பெறலாம். சிறப்பு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.இத்திருமணத்தை, ஆத்துார் துளுவ வேளாளர் சங்கத்தலைவரான ஸ்ரீராம், ஆத்துார் நகராட்சி துணை தலைவி கவிதா உள்ளிட்ட குடும்பத்தினர் நடத்தி வைக்கின்றனர். இதில் துளுவ வேளாளர் மகாஜன மன்ற தலைவர் கண்ணன், செயலர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர் செல்வகுமார், துணைச்செயலர் ஆறுமுகம், இயக்குனர்கள் பங்கேற்கின்றனர். திருமண விழாவுக்கு, துளுவ வேளாளர் சமுதாயத்தினர், மக்கள் உள்பட அனைவருக்கும், திருமண அழைப்பிதழ் அச்சடித்து பெண், மாப்பிள்ளை வீட்டினர் என, அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.திருக்கல்யாண பலன்திரவுபதி அம்மனுக்கு திருவிழாவின்போது திருக்கல்யாணம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வீடு கட்டுதல், கடன் பிரச்னை போன்ற பல்வேறு துன்பங்கள் நீங்க, பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, பக்தர்கள் மஞ்சள் தாலி கயிற்றை, கோவிலுக்கு வழங்குகின்றனர். திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வழிபடும் பக்தர்களுக்கு, மஞ்சக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை