உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் மினி லாரிகவிழ்ந்து டிரைவர் பலி

ஏற்காட்டில் மினி லாரிகவிழ்ந்து டிரைவர் பலி

ஏற்காடு:-ஏற்காடு, முண்டகம்பாடியை சேர்ந்த, டிரைவர் விஜயன், 65. இவர் நேற்று மாலை, 6:40 மணிக்கு செம்மநத்தத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 10க்கும் மேற்பட்டோரை, கொம்புத்துாக்கி கிராமத்துக்கு மினி லாரியில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்தார். வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அடுத்துள்ள, 2வது வளைவில் சென்றபோது, விஜயன் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் விஜயன் படுகாயம், மற்றவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களை மக்கள் மீட்டு, வாழவந்தி சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயனுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர். சட்டத்துக்கு புறம்பாக, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ