சிறை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து:கள்ளக்காதலி உள்பட 3 பேர் சிக்கினர்
சேலம்:சேலம், சின்னகொல்லப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் சசிக்குமார், 25. கோரிமேட்டில் உள்ள கல்குவாரியில் வேலை செய்கிறார். இவருக்கும், கல்குவாரி அதிபர் சிவா வீட்டில் சமையல் வேலை செய்த, கன்னங்குறிச்சி, பங்களா தெருவை சேர்ந்த சவுந்தர்யா, 25, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை, சவுந்தர்யாவின் கணவர் சபரி, 35, கண்டிக்க, வேலையில் இருந்து சவுந்தர்யா நின்றுவிட்டார்.ஆனால் டிரைவர், நெருங்கி பழகிய வீடியோவை சவுந்தர்யாவுக்கு அனுப்பினார். ஆத்திரம் அடைந்த சபரி, டிரைவரை நேரில் அழைத்து எச்சரித்தும் பலனில்லை. இதனால் கடந்த, 7 காலை, சேலம் மத்திய சிறை அருகே, சசிக்குமாரை வரவழைத்தார். அங்கு சவுந்தர்யா, 'இனி என்னிடம் பழக வேண்டாம்' என, சசிக்குமாரிடம் கூறினார்.அப்போது சபரி, கத்தியால் சரமாரியமாக குத்தியதில், சசிக்குமார் சரிந்தார். அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து, சவுந்தர்யா, சபரி, அவர்களது உறவினரான, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பாலமுருகன், 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.