மேலும் செய்திகள்
நில புரோக்கரை தாக்கிய 'வெல்டிங்' தொழிலாளி கைது
24-Jan-2025
சேலம்: சேலம் அருகே, கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வேன் டிரைவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சேலம் அருகே, வீராணம், வீமானுார் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். 29. இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன், மணி-மேகலை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரு-வருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரிந்து வாழ்ந்தனர். குமரவேல் சரக்கு வேன் டிரைவர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட் அருகே, பூக்களை ஏற்றி வரும் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.இந்நிலையில், வீராணம், துளசி மணியனுாரை சேர்ந்த பிரகாஷ், 38, என்பவருக்கும் அதே பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. கடந்தாண்டு, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த பிரகாஷ், சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். அப்போது, தன் காதலியுடன் குமரவேல் நெருங்கி பழகி வந்துள்-ளதை அறிந்த பிரகாஷ், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமரவேல், பெண்ணுடன் பழகிய போது எடுத்த போட்டோவை, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையறிந்த பிரகாஷ், குமரவேல் மீது ஆத்திரமடைந்திருந்தார். நேற்று முன்-தினம் இரவு, 9:00 மணிக்கு குமரவேல் மற்றும் அவரது நண்-பரும், துளசி மணியனுார் அய்யனாரப்பன் கோவில் அருகே, மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது வந்த மூன்று பேர், குமர-வேலுவிடம் பெண்ணுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியபோது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டு மோதலானது. ஆத்திரமடைந்த பிரகாஷ், அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து, குமரவேலுவை தாக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பினர்.வீராணம் போலீசார் விசாரித்து பிரகாஷ், அவரது நண்பர்கள் மாணிக்கம், 32, கனகராஜ், 34, ஆகிய மூன்று பேரை கைது செய்-தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரகாஷ் சிறைக்கு சென்றதும், அவரது காதலியுடன் குமரவேல் நெருங்கி பழகி வந்-துள்ளார். இதையறிந்த பிரகாஷ் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பிரகாஷ், குமரவேலை கொலை செய்தது தெரியவந்துள்ளது.கைதான பிரகாஷ் மீது, போதை பொருள் விற்பனை, அடிதடி உள்-ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலிலும் உள்ளார். குண்டர் சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
24-Jan-2025