உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டி.ஆர்.ஓ., இனி இணை கலெக்டர் அரசாணை வெளியிட வலியுறுத்தல்

டி.ஆர்.ஓ., இனி இணை கலெக்டர் அரசாணை வெளியிட வலியுறுத்தல்

சேலம்: தமிழ்நாடு சிவில் சர்வீஸ் சங்கம், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அலுவலர் சங்க மாநில தலைவர் ராகவன் தலைமைவகித்தார். அதில், 2025 சிவில் சர்வீஸ் அலுவலர் பட்டியலை வெளியி-டுதல்; துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடுதல்; பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை கலெக்டர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்குதல்; மாவட்ட தலைநகரங்களில் குடியிருப்-புகளை கட்டித்தருதல்; 'தமிழ்நாடு அட்மினிஸ்டிரேட்டிவ் சர்வீஸ்' என பெயர் மாற்றம் செய்வதோடு, மாவட்ட வருவாய் அலுவலர்களை இனி இணை கலெக்டர் என அழைக்க, அர-சாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சர்வீஸ் சங்க மாநில துணைத்தலைவர் முனியப்பன், டி.ஆர்.ஓ.,க்கள் சேலம் ரவிக்குமார், நாமக்கல் சரவணன், ஆர்.டி.ஓ.,க்கள் அம்பாயிரநாதன், அசோகன், முகமது குதரத்-துல்லா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !