போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
சேலம், சேலம் கோட்ட கலால் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி சேலம், கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சேலம் உதவி கமிஷனர் செந்தில்அரசன்(கலால்), கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஏந்தியபடி, மாநகராட்சி அலுவலகம் வழியே சென்ற மாணவர்கள், மீண்டும் பள்ளியை அடைந்தனர்.கோட்ட கலால் அலுவலர் தியாகராஜன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியை நளினி, போதை பொருள் ஒழிப்பு குழு ஒருங்கிணைப் பாளர் அருணாதேவி உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.