உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாட்டியை பலாத்காரம் செய்து வெட்டி கொலை போதை இளைஞர் கைது

பாட்டியை பலாத்காரம் செய்து வெட்டி கொலை போதை இளைஞர் கைது

இடைப்பாடி: பாட்டியை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டி கொன்ற, 'போதை' இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி, ஆலச்சம்பாளையம், காளிக-வுண்டம்கொட்டாயை சேர்ந்தவர் வள்ளியம்மாள், 80. இவரது கணவர் ரங்ககவுண்டர், சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, 4 மகள்கள் உள்ளனர். ஒரு மகன் இறந்துவிட்டார். மகன் வழி பேரன் பாலகிருஷ்ணன் பராமரிப்பில், அருகே உள்ள மற்றொரு வீட்டில் வள்ளியம்மாள் வசித்து வந்தார்.மகள் சின்னபொண்ணுவின் மகள் கீர்த்தி. இவரது கணவர் விக்னேஷ், 22. இவர் அடிக்கடி, வள்ளியம்மாள் வீட்டுக்கு வந்து மது அருந்த பணம் வாங்கியுள்ளார். பேத்தியின் கணவர் என்-பதால் வள்ளியம்மாளும் பணம் கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வள்ளியம்மாள் வீட்டின் முன் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் வந்தபோது விக்னேஷ் பைக்கில் புறப்பட்டார். ஆனால் வீட்டின் முன் வள்ளி-யம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.மக்கள், பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தகவல்-படி இடைப்பாடி போலீசார் வந்து விசாரித்தனர். தொடர்ந்து சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா உள்-ளிட்ட அதிகாரிகள் விசாரித்தனர். பின் விக்னே ைஷ பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்ததில், குடிபோதையில் வள்ளியம்மாளை பலாத்காரம் செய்து கொன்றதாக ஒப்புக்-கொண்டார். அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பாட்டி என்ற முறையில் வள்ளியம்மாள் வீட்டுக்கு விக்னேஷ் வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த அவர், பாட்டியை தவிர யாரும் இல்லாததை பயன்படுத்தி அவரை தள்ளிவிட்டு பலாத்காரம் செய்துள்ளார். அவர் கூச்ச-லிட்டு கத்தியுள்ளார். இச்சம்பவம் வெளியே தெரிந்தால் அவ-மானம் என கருதிய விக்னேஷ், அரிவாளால் தாடை பகுதியில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இதை, விசார-ணையில் அவர் ஒப்புக்கொண்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !