மேலும் செய்திகள்
பள்ளியில் ரத்ததான முகாம்
15-Oct-2025
சேலம்:இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், 1980 நவ., 3ல் தொடங்கப்பட்டதை நினைவு கூறும்படி, சேலம், மெய்யனுார் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. வடக்கு மாநகர் தலைவர் புரு ேஷாத்தமன் தலைமை வகித்தார். செயலர் மனோகரன் வரவேற்றார்.எஸ்.சி., - எஸ்.டி., விஜிலென்ஸ் உதவி கமிஷனர் நாகராஜன், முதல் கொடையாளராக ரத்தம் கொடுத்து, தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 9 பெண்கள் உள்பட, 60 பேர் ரத்ததானம் செய்தனர். மருத்துவ கல்லுாரி ரத்தவங்கி அலுவலர் ரவீந்திரன் தலைமையில் குழுவினர், ரத்தம் சேகரித்து எடுத்துச்சென்றனர். மாவட்ட செயலர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Oct-2025