தி.மு.க., சார்பு அணி கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலர் அழைப்பு
வாழப்பாடி, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணி கூட்டத்துக்கு, மாவட்ட செயலர் சிவலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,வாழப்பாடியில் உள்ள, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி தலைமையில், வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 10:00 மணிக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், துணை அமைப்புகளான அனைத்து அணிகளின் மாவட்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தல், ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.