இ.கம்யூ., போராட்டம்
சங்ககிரி:இ.கம்யூ., சார்பில் சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. சங்ககிரி தாலுகா செயலர் பெஞ்சமின் தலைமை வகித்தார். அதில் சேலம் மாவட்ட செயலர் மோகன் பேசுகையில், ''ஒலக்கச்சின்னானுாரில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு, அரசு சார்பில், 4ல் ஒரு பங்கு பணம் செலுத்தி, பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இதன்மூலம் 50 குடும்பங்கள் பயன்பெறும்,'' என்றார். சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்க, அனைவரும் கலைந்து சென்றனர்.