உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் எலக்ட்ரீஷியன் பலி மற்றொருவர் படுகாயம்

விபத்தில் எலக்ட்ரீஷியன் பலி மற்றொருவர் படுகாயம்

வீரபாண்டி: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 31. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே சென்னகி-ரியை சேர்ந்தவர் டேவிட்குமார், 32. எலக்ரீஷியன்களான இரு-வரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு நாகராஜ், 'பிளசர்' பைக்கில் டேவிட்குமாரை ஏற்றிக்கொண்டு ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் பள்ளி சாலையில் இருந்து சுப்பு-ராவ்புரத்துக்கு புறப்பட்டார்.அப்போது ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் பிரதான சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். நாகராஜ், சேலம் அரசு மருத்துவமனையிலும், டேவிட்குமார் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று நாகராஜ் உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி