உடையாபட்டியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
சேலம், தமிழ்நாடு மின் பகிர்மான வட்டம், சேலம் கிழக்கு கோட்டம் சார்பில், மாதந்தோறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (12) காலை, 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை, செயற்பொறியாளர் தலைமையில் சேலம் உடையாபட்டி கிழக்கு காமராஜர் நகர் காலனி பகுதியில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.