மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
சேலம்: சேலம் மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:கடந்த, 2024 பிப்., 4ல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி, இன்றுடன் ஓராண்டாகியும், ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. 12 ஆண்டுக்கு பின் நடந்த நியமன தேர்வில், தேர்ச்சி பெற்ற எங்களை கொண்டே காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும். இதுதொடர்பாக, முதல்வர் முதல், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் வரை மனு அளித்துள்ளோம். 2026 ஜனவரிக்குள், 19,000 ஆசிரியர் பணியிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு இன்னும், 12 மாதங்களே உள்ளன. இரு பதவிக்கு தேர்வு வைத்துவிட்டு, அதில் வட்டார வள மைய பயிற்றுனர் பணியை நிரப்பாமல் விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. அந்த வேலையை நம்பி தேர்வு எழுதியவர்கள் நிலையை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக அரசிதழில் வெளிவந்துள்ள, 5,174 தற்காலிக பணியிடம் முழுவதையும் நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Jan-2025