உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடை தடம் ஆக்கிரமிப்பு ஏரி நீர் ஆதாரத்துக்கு ஆப்பு

ஓடை தடம் ஆக்கிரமிப்பு ஏரி நீர் ஆதாரத்துக்கு ஆப்பு

சேலம்: சேலம், மாமாங்கம் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:மாமாங்கத்தில் பழமையான ராமர் பாதம் கோவில் வழியே செல்லும் நீரோடையை, அங்குள்ள நிறுவனம் ஆக்கிரமித்துக்கொண்டது. தற்போது கோவிலை சுற்றியுள்ள பகுதியையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.கீழ் போர்டு ஓடையில் இருந்து வழிந்தோடும் நீர், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியே அருகே உள்ள ஜாகீர் பெரிய மோட்டூர், ஜாகீர் ரெட்டிப்பட்டி, சூரமங்கலம் பகுதியில் உள்ள ஏரியை அடையும். ஆனால் ஓடை தடம் ஆக்கிரமிப்பால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. அதனால் ஏரிகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல, ஓடை தட ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ