உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்ஜினியரிங் மாணவி துாக்கிட்டு தற்கொலை

இன்ஜினியரிங் மாணவி துாக்கிட்டு தற்கொலை

வாழப்பாடி: கடலுார் மாவட்டம், விருதாசலத்தை சேர்ந்த வேல்முருகன் மகள் தர்ஷினி, 22. சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இறுதி ஆண்டு படித்தார். இதனால் வாழப்பாடி, அய்யா கவுண்டர் தெருவில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், அவரது தோழியுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு, தர்ஷினி அறைக்கு சென்று, அவரை தோழி அழைத்தார். நீண்ட நேரமாக கதவை திறக்காததால், ஜன்னல் வழியே பார்த்தபோது, துப்பட்டாவால் தர்ஷினி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. வாழப்பாடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'தர்ஷினிக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. இதில் மனம் உடைந்த அவர், தற்கொலை செய்து கொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !