உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அமித்ஷா சொல்வதை கேட்க சென்று வந்தார் இ.பி.எஸ்.,

அமித்ஷா சொல்வதை கேட்க சென்று வந்தார் இ.பி.எஸ்.,

சேலம் :சேலத்தில், மத்திய மாவட்ட, தி.மு.க., சார்பில், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்; ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம், குரங்குச்சாவடியில் நேற்று நடந்தது. அம்மாபாளையம் பகுதி செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தில் மண், மொழி, மானம் காக்க, தி.மு.க.,வினருடன் மக்களும் அணிதிரள வேண்டும். முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற தொண்டனாகவும், சேவகனாகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, 4 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட பாடுபட வேண்டும்,'' என்றார். தொடர்ந்து கட்சி தலைமை பேச்சாளர்கள் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, ஹரிணி பேசினர். எம்.பி., செல்வகணபதி, மாநகர் செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், இடைப்பாடியில் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் செல்வகணபதி தலைமை வகித்தார். எழும்பூர் தொகுதி, எம்.எல்.ஏ., பரந்தாமன் பேசுகையில், ''தப்பு செய்தவர்கள் தான் கார், காராக மாறிப்போவார்கள், கர்சிப்பை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டு செல்வார்கள். இ.பி.எஸ்., அமித்ஷாவுடன் பேச்சு நடத்த செல்லவில்லை. அவர் சொல்வதை கேட்பதற்கு சென்று வந்துள்ளார்,'' என்றார்.மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், பொருளாளர் பொன்னுசாமி, நகர செயலர் பாஷா, ஒன்றிய செயலர்கள் பரமசிவம், நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.'மானங்கெட்ட பொழப்பு'சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில்,ஆத்துாரில் மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமையில் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,வான, மாநில கொள்கை பரப்பு இணை செயலர் புகழேந்தி பேசியதாவது:தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது மானங்கெட்ட பொழப்பு. வேட்பாளராக இருந்தால், யார பார்த்தாலும் கும்பிட வேண்டும். இரவில், 'மைல்' கல்லை பார்த்து மனிதர் என கும்பிட்டேன். தி.மு.க.,வை அழித்துவிடுவேன் என கூறியவர்கள், அழிந்து போனார்கள். அனைவருக்கும் கல்லறை கட்டி பழக்கப்பட்டது, தி.மு.க., தம்பி விஜய், நீ எத்தனை படம் கூட நடித்திருக்கலாம். ஆனால், தி.மு.க.,வை பகைத்தால், நாங்கள் பொறுப்பல்ல. அது, தி.மு.க., ராசியாகும். இவ்வாறு அவர் பேசினார்.எம்.பி., மலையரசன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ