உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2026ல் இ.பி.எஸ்., முதல்வர்: முன்னாள் அமைச்சர் பேச்சு

2026ல் இ.பி.எஸ்., முதல்வர்: முன்னாள் அமைச்சர் பேச்சு

வீரபாண்டி: அ.தி.மு.க.,வின், வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம், ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலத்தில் உள்ள சோலையப்ப கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் வருதராஜ் வரவேற்றார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.அதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் வீரபாண்டி தொகுதிக்கு மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் இத்தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நம் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறினால் போதும்.அதேநேரம், 2024 லோக்சபா தேர்தல் தோல்விக்கு சரியான கூட்டணி அமைக்காதது தான் காரணம் என பலரும் ஆலோசனை கூறினர். அதனால் வரும் சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணி அமையும். 2026 சட்டசபை தேர்தலில் நாம் வெற்றி பெறுவது நிச்சயம். இ.பி.எஸ்., முதல்வராவது உறுதி.இவ்வாறு அவர் பேசினார்.இதில் வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, தலைமை பேச்சாளர் விஜயா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். அதேபோல் வீரபாண்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சித்தர்கோவில் அருகே முருங்கப்பட்டியில் நடந்தது. அதில் ஒன்றிய செயலர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை