உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தப்பிய கைதி சுற்றிவளைப்பு

தப்பிய கைதி சுற்றிவளைப்பு

சேலம்: சேலம், மூணாங்கரடை சேர்ந்தவர் வினோத், 22; கருங்கல்பட்-டியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்தார். 2025ல் போதை மாத்திரை விற்றதாக, அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை பிடிக்க, நீதிமன்றம் கடந்த செப்., 24ல் பிடிவாரன்ட் பிறப்பித்தது.வீடு அருகே நேற்று அவரை போலீசார் கைது செய்து, அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். திடீரென தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அவரை தேடிய நிலையில் நள்ளிரவில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை