உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புலிகளை காக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்

புலிகளை காக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்

ஓமலுார், சேலம் மண்டல வனக்கோட்டம், பெரியார் பல்கலை சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில், சர்வதேச புலிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. துறைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். அதில் விழாவை தொடங்கிவைத்து, பல்கலை துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி பேசியதாவது:லட்சம் புலிகளுக்கு மேல் இருந்த நிலையில், விலங்கு வேட்டை, நகர மயமாக்கலால் புலிகளின் எண்ணிக்கை, 3,600 ஆக குறைந்துவிட்டது. பல்லுயிர் பெருக்கத்தில் அனைத்து விலங்குகளுக்கும் பங்கு உண்டு. உணவு சங்கிலியில் புலிகள் முதலாவதாக உள்ளது. உணவு சங்கிலி உடைபட்டால், இயற்கை சமநிலை வேறுபாடு அடையும். இந்நிலை ஏற்படாமல் தடுக்க, புலிகளை பாதுகாப்பதில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, புலிகளை பாதுகாப்பதில் இந்தியாவின் பங்களிப்பு, புலிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, புலிகள் ஆய்வாளர் அசோக்குமார் பேசினார். வங்கா நரி பாதுகாப்பு மைய உயிரியல் ஆய்வாளர் பிரவீன்குமார், விழா ஒருங்கிணைப்பு செயலர் தங்கவேல், சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை கல்வி மாணவ, -மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !