உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலப்பட உணவு பொருட்கள் விற்பனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த எதிர்பார்ப்பு

கலப்பட உணவு பொருட்கள் விற்பனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த எதிர்பார்ப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், வெப்படை, ஆவத்திபாளையம், கொக்-கராயன்பேட்டை, காவிரி, ஐந்து பனை, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசித்து வரு-கின்றனர். இங்கு பெரும்பாலான கடைகளில், கலப்பட உணவுப்-பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அதேபோல், இறைச்சி கடைகளிலும், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்கின்-றனர். கடந்த, 4 மாதங்களுக்கு முன், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே தரமற்ற இறைச்சி விற்பனை செய்வதை கண்-டறிந்து, கடை உரிமையாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்-தனர். எனவே, கலப்பட உணவுப்பொருட்களை கண்டறியும் வகையில், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் கூறுகையில், ''கலப்பட உணவுப்பொருட்களை கண்ட-றியும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி விரைவில் நடத்த நடவ-டிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ