போலி உரம் அதிகாரி எச்சரிக்கை
சேலம், தலைவாசல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கவிதா தலைமையில் தனிப்படையினர், தலைவாசல் பகுதிகளில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, டி.ஏ.பி., பெயரில் போலி உரங்கள், ஆங்காங்கே விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயிகளின் தேவை, கோரிக்கைப்படி, இந்த உரங்களை வியாபாரிகள் விற்றது தெரிந்தது. அதனால் தலைவாசல் வட்டார சுற்றுப்புற விவசாயிகள், இந்த போலி உரங்களை வாங்கி ஏமாற வேண்டாம் என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் இந்த மோசடி, முறைகேடு வியாபாரிகளை தேடி வருவதால் அவர்கள் பற்றிய விபரம் தெரிந்தால், 94433 - 83304, 99946 - 31906 என்ற எண்களில் தகவல் தரலாம். போலி உரங்களை நம்பி வாங்கி, யாரும் ஏமாற வேண்டாம் என, வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.