உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கரையானை அழிக்க ஆயில் என நினைத்துபெட்ரோலை ஊற்றிய விவசாயி தீயால் பலி

கரையானை அழிக்க ஆயில் என நினைத்துபெட்ரோலை ஊற்றிய விவசாயி தீயால் பலி

கெங்கவல்லி;பூஜை அறை கதவில், கரையானை அழிக்க பழைய ஆயில் என நினைத்து, பெட்ரோலை ஊற்றியதில், அருகே இருந்த விளக்கில் இருந்து தீப்பற்றி விவசாயி உயிரிழந்தார்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுார், சின்ன அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி, 47. விவசாயியான இவர், கடந்த, 26 இரவு, 8:00 மணிக்கு, பூஜை அறை கதவு பகுதியில் இருந்த கரையானை அழிக்க, பழைய ஆயில் என நினைத்து, பெட்ரோலை ஊற்றியுள்ளார். அப்போது, அருகே எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்து தீப்பற்றியது. இதில், ராமசாமி, அருகே இருந்த அவரது மகனான, 6ம் வகுப்பு மாணவர் பிரதீஷ், 11, படுகாயம் அடைந்தனர்.தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இருவரையும் மீட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ராமசாமியை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் அங்கு, நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை