உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காட்டுப்பன்றி கடித்து விவசாயி படுகாயம்

காட்டுப்பன்றி கடித்து விவசாயி படுகாயம்

தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வெள்ளையூரை சேர்ந்த, விவசாயி முத்துசாமி, 65. இவர் நேற்று மதியம், 2:00 மணிக்கு, வெள்ளையர் ஏரிக்கரை அருகே உள்ள மக்காச்சோள தோட்டத்துக்கு சென்றார். அப்போது ஒரு காட்டுப்பன்றி, முத்துசாமி மீது பாய்ந்து, அவரது இடது தொடை பகுதியில் கடித்து குதறியது.படுகாயம் அடைந்த அவரை, அப்பகுதியினர் பார்த்து மீட்டு, வீரகனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து முத்துசாமி கூறுகையில், 'வெள்ளையூர் ஏரி பகுதியில், காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அந்த பன்றிகளை, வனப்பகுதியில் விட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ