உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை, தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சாலை, தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சங்ககிரி தாலுகா குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.அதில் சாலை வசதி, தரைப்பாலம் கேட்டு விவசாயிகள் கோஷம் எழுப்பினர். இதில் சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி, துணை தலைவர் தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து சங்ககிரி தாசில்தார் வாசுகியிடம் அளித்த மனு:அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் குள்ளம்பட்டி முதல் செட்டிப்பட்டி வரை சாலை வசதியின்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.அங்கு சாலை அமைக்க வேண்டும். குள்ளம்பட்டியில் இருந்து செல்லியம்மன் கோவில் வரை, சரபங்கா ஆற்றுக்கு மேற்கு புறமும், செல்லியம்மன் கோவிலில் இருந்து ஓங்காளியம்மன் கோவில் வரை சரபங்கா ஆற்றுக்கு தெற்கு புறம் அளவீடு செய்து, இரு இடங்களில் சாலை வசதி அமைத்துத்தர வேண்டும்.தவிர செல்லியம்மன் கோவில் அருகே இருந்த தற்காலிக தரைப்பாலம், மழையால் சேதமடைந்து விட்டது. அதனால் புது பாலத்தை கட்டித்தரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ