ஏரிகளில் தண்ணீர் நிரப்ப விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலம் :அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம் மாவட்ட காவிரி உபரிநீர் சரபங்கா நதி இணைப்பு ஏரிகள் நீர்பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவனர் கணபதி தலைமை வகித்து பேசியதாவது:இந்தாண்டு மட்டும் மேட்டூர் அணை, 6 முறை நிரம்பி உபரிநீர் கடலீல் கலந்து வீணானது. காவிரி - சரபங்கா நதி இணைப்பு வழங்கப்படாத இருப்பாளி, ஆரூர்பட்டி, தொப்பளாம்பட்டி உள்ளிட்ட, 40 ஏரிகளை இணைக்க, 115 கோடி ரூபாய் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு, உடனே அந்த நிதியை ஒதுக்கி விரைவில் பணி முடித்து, அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரிகளை இணைக்கும் வாய்க்கால்களை துார் வார வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட தலைவர் சின்னதுரை, செயலர் பெருமாள், பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.