உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காற்றால் மக்காச்சோளம் சேதம் இழப்பீடு கோரும் விவசாயிகள்

காற்றால் மக்காச்சோளம் சேதம் இழப்பீடு கோரும் விவசாயிகள்

தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல், ஆத்துார், அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம், இரண்டு மணி நேரம், சூறாவளி காற்று வீசியது. இதில் வெள்ளையூர், பகடப்பாடி, கவர்பனை, பின்னனுார் உட்பட பல்வேறு இடங்களில், 500 ஏக்கருக்கு மேற்பட்ட அளவில் மக்காச்சோள பயிர்கள் முறிந்து விழுந்தன. கதிர் பிடித்துள்ள பயிர்கள் விழுந்ததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். அப்பகுதிகளில், வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தலைவாசல் விவசாயிகள் கூறியதாவது:கடந்த ஜனவரி, பிப்ரவரியில் விதை நடவு செய்த மக்காச்சோள செடிகள், 95 முதல், 100 நாள் பயிராக உள்ளன. கதிர் பிடிக்கும் நேரத்தில் பெய்த மழையில், மக்காச்சோள பயிர்கள் முறிந்து விழுந்தன. அறுவடைக்கு, 20 நாளே உள்ள நிலையில், மக்காச்சோளம் அதிகளவில் சேதம் அடைந்துள்ளது. ஏக்கருக்கு, 10,000 முதல், 20,000 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதுபோல, பெரம்பலுார் அருகே, நேற்று முன்தினம் இரவு அடித்த பயங்கர காற்றில், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ