உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளப்பெருக்கால் விசைப்படகு நிறுத்தம்

வெள்ளப்பெருக்கால் விசைப்படகு நிறுத்தம்

இடைப்பாடி, மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துச்செல்கிறது. இதனால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு, காவிரி ஆற்றில் இயக்கப்படும் விசைப்படகு போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள், நெருஞ்சிப்பேட்டை கதவணை வழியே, 6 கி.மீ., சுற்றிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ