உள்ளூர் செய்திகள்

ஏட்டு தற்கொலை

வாழப்பாடி: சேலம் மாநகரம் காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் ரவீந்திரநாத், 36. பெத்தநாயக்கன்பாளையம், தாண்டானுாரை சேர்ந்த இவர், கடந்த, 30 காலை, வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த, 1 மதியம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரவீந்திரநாத் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், ‘ரவீந்திரநாத் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் தற்கொலை செய்துகொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு மனைவி கவிப்ரியா, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !