ரூ.1 கோடி கையாடல் நிதி நிறுவன ஊழியர் கைது
சேலம், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், ஸ்ரீராம் நிறுவனத்தின், மண்டல கடன் வசூலிக்கும் தலைமை அலுவலர் நரேந்திரகுமார், சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். அதில், 'கொளத்துார் கிளை டீம் லீடராக பணிபுரிந்த, காவேரிபுரத்தை சேர்ந்த சிலம்பரசன், 34, உடன் பணிபுரிவோருடன் கூட்டு சேர்ந்து, 40 கடன்தாரர்களின் கணக்குகளை போலியாக உருவாக்கி, 1.11 கோடி ரூபாய் கையாடல் செய்தார்' என கூறியிருந்தார். விசாரித்த போலீசார், சிலம்பரசனை தேடி வந்தனர். 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர், நேற்று கர்நாடகா மாநிலம் செல்வதற்கு, கொளத்துார் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்க, அங்கு சென்ற போலீசார், சிலம்பரசனை கைது செய்தனர்.