உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் - பஸ் மோதல் மீன்வளத்துறை ஊழியர் பலி

மொபட் - பஸ் மோதல் மீன்வளத்துறை ஊழியர் பலி

மேட்டூர், நவ. 1-மேட்டூர், அண்ணா நகரை சேர்ந்தவர் ரஜினிகுமார், 39. அருகே உள்ள காவிரி பாலம் பகுதியைசேர்ந்தவர் தியாகு, 30. இருவரும் மேட்டூர் மீன்வளத்துறையில் உதவியாளராக பணிபுரிந்தனர். நேற்று முன்தினம், மேட்டூர் மீன் விதை பண்ணையில் மீன்குஞ்சுகளை எடுத்துச்சென்று தலைவாசல் குட்டையில் விட்டனர். இரவு, 7:00 மணிக்கு அங்கிருந்து மேட்டூர் நோக்கி மொபட்டில் வந்தனர். தியாகு ஓட்டினார். பொட்டனேரி அருகே வந்தபோது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ், மொபட் எதிரெதிராக மோதின. இதில் ரஜினிகுமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தியாகு தப்பினார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ