தென்பெண்ணையில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஆற்றில் ரசாயன நுரையுடன் ஓடிய தண்ணீர்
ஓசூர்: தென்பெண்ணையாற்றில் நேற்று, 3வது நாளாக வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்ட நிலையில், ரசாயன நுரையுடன் தண்ணீர் பெருக்-கெடுத்து ஓடியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,206 கன அடியாக இருந்த நீர்வ-ரத்து, நேற்று காலை, 1,419 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.49 அடிக்கு நீர் இருப்பால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,376 கன அடி நீரும், வலது, இடது கால்வாயில், 57 கன அடி நீரும் திறக்-கப்பட்டது. நேற்று, 3வது நாளாக தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில், 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் வெள்ளப்-பெருக்கு ஏற்பட்டது. அதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றை கடக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை கழுவவோ செல்ல வேண்டா-மென, வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரில், ரசா-யனம் அதிகளவில் இருந்ததால், தென்பெண்ணை ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் ரசாயன நுரை அதிகளவில் தேங்கி துர்-நாற்றம் வீசியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்று காலை நில-வரப்படி அதிகபட்சமாக கெலவரப்பள்ளி அணை பகுதியில், 90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. ஓசூர், 37.50, சின்னாறு அணை, 30, சூளகிரி, 29, தளி, 15, ராயக்கோட்டை, 4, தேன்கனிக்-கோட்டை, கிருஷ்ணகிரி தலா, 2, ஊத்தங்கரை, 1.40 மி.மீ., என, மாவட்டம் முழுவதும், மொத்தம், 210.90 மி.மீ., அளவிற்கு மழை பதிவானது.