உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளிப்பாளையம் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

பள்ளிப்பாளையம் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையத்தில், குட்கா விற்பனை செய்த, 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளிப்பாளையத்தில் காடச்சநல்லுார், மேட்டுக்கடை, ரங்கனுார் நால்ரோடு பகுதியில் உள்ள கடை, பேக்கரி, டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள், போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, 5 கடைகளில் இருந்த, 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல் முறை குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட, 5 கடைகளுக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி