மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி
25-Nov-2024
கெங்கவல்லி: கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1997 - 99ல் படித்த மாணவர்கள், கற்பித்த விரிவுரையாளர்கள், 25 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தற்போதைய முதல்வர் விசாலாட்சி தலைமை வகித்தார். அப்போதைய முதல்வர் முத்துசாமி முன்னிலை வகித்து பேசினார்.முன்னதாக கற்பித்து மறைந்த ஆசிரியர் சின்னுசாமி, உடன் பயின்ற மேச்சேரி ரமேஷ் ஆகியோருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து படித்தபோது ஏற்பட்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து, குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பணியில் இருந்த ஆசிரியர்கள், இரவு காவலருக்கு, நினைவு பரிசுகள் வழங்கினர். இதில் சேலம், 'டயட்' விரிவுரையாளர் கலைவாணன், விருதுநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வர் பாண்டியன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
25-Nov-2024