மேலும் செய்திகள்
இலவச கண்மருத்துவ முகாம்
22-Sep-2025
ஆத்துார், ராசி விதைகள் நிறுவனம் சார்பில், ஆத்துாரில் 26வது ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி, அண்ணா கலையரங்கில் நேற்று முன்தினம், ராசி விதைகள் நிறுவனம், ராசி முத்துக்கவுண்டர் முத்தாயம்மாள் அறக்கட்டளை மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 26வது ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.இந்த முகாமிற்கு, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால், முகாமை துவக்கி வைத்தார். 1,350 பேர் பங்கேற்று, கண் தொடர்பான பரிசோதனை செய்தனர்.இதில், 550 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து அழைத்து செல்லப்பட்டனர். கண் சிகிச்சை செய்தவர்களுக்கு சொட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
22-Sep-2025