சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
சேலம்: சேலம் மாவட்டம் முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சதுர்த்தி விழாவையொட்டி சேலம், சின்னக்கடை வீதி ராஜகணபதி கோவிலில் நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து ராஜகணபதிக்கு, 108 லிட்டர் பால், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.பின் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு விஸ்வநாத குருக்கள் தலைமையில் வேதமந்திரம் முழங்க அர்ச்சனை, சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொது, சிறப்பு தரிசனம் வழியே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் வரிசையில் சென்று வழிபட்டனர். சதுர்த்தி விழா, 12 நாள் வைபவமாக, வரும், 18 வரை கொண்டாடப்படுகிறது. அசம்பாவிதம் தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், சுகவனேஸ்வரர் கோவில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலை சித்தி விநாயகர்; செவ்வாய்பேட்டை, பாக்குபேட்டை சித்தி விநாயகர்; ஜாகீர்அம்மாபாளையம் இரட்டை பிள்ளையார், ஏற்காடு அடிவார பஞ்சமுக விநாயகர், வெள்ளி கவச அலங்காரங்களில் காட்சியளித்தனர். கன்னங்குறிச்சியில் அவதாரம் நண்பர் குழு சார்பில், 108 விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. செவ்வாய்ப்பேட்டை அக்ரஹாரம் வீதி, திருமலை விநாயகர் கோவிலில், கடல் பறவை சங்கம் சார்பில், 41ம் ஆண்டாக கற்பக விநாயகர், ஆலிழை கணபதி, சித்தி விநாயகர், சங்கடஹர சதுர்த்தி உள்பட, 10 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. தவிர மாநகரின் முக்கிய சந்திப்பு இடங்களில் மக்கள் தரப்பில், 1,070 இடங்கள், இந்து அமைப்புகள் சார்பில், 58 இடங்கள் என, 1,128 இடங்களில் சிலை வழிபாடு நடந்தது. அதேபோல் மாவட்டத்தில், 958 இடங்களில் விநாயகர் சிலை வைத்து சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மத நல்லிணக்கம்சேலம் கோட்டை தலைவெட்டி முனியப்பன் கோவில் அருகே சமத்துவ மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது. அதில் நாகராஜன், வக்கீல் பிரின்ஸ், அப்துல்சலாம், வரலாற்று சங்க செயலர் பர்ணபாஸ் உள்பட பலர் பங்கேற்று, மத நல்லிணக்கம், அமைதி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.மேட்டூர், ஆத்துாரில்சிலைகள் வைத்து வழிபாடுவிநாயகர் சதுர்த்தியையொட்டி, மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எல்-லைக்குள் நேற்று, 25 சிலைகள், கொளத்துாரில், 31, கருமலைக்கூ-டலில், 30, மேச்சேரியில், 40 என, 126 இடங்களில் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். இச்சிலைகள் நாளைக்குள் மேட்டூர் அணை, காவிரியாறு, கால்வாயில் கரைக்கப்படும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.அதேபோல் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி பகுதி-களில், 47 சிலைகள், ஆத்துார் டவுன், ஊரகம், தலைவாசல், கெங்-கவல்லி, வீரகனுார், மல்லியக்கரை பகுதிகளில், 116 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், 40, ஏத்தாப்பூர் ஸ்டேஷன் எல்லையில், 20, கருமந்துறை, கரியகோயில் எல்-லையில், 28 என, 88 விநாயகர் சிலைகள் வைத்து, சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அதேபோல் காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், 46 சிலைகள் வைத்து பூஜை நடந்தது.