மேலும் செய்திகள்
உலக மண்வள தின விழா
06-Dec-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில், சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் உலக மண்வள தின விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் தலைமை வகித்து பேசியதாவது:நம் பகுதியில் மண் ஆய்வு படி, கரிம சத்து குறைவாக உள்ளதால், மண் வளத்தை மேம்படுத்த, பசுந்தாள் உரமான தக்கை பூண்டு பயன்படுத்த வேண்டும். முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் மண்புழு உர படுக்கை, மண்புழு ஆகியவை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மண் வளத்தை அதிகப்படுத்த, தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தில் இயற்கை உரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மண் வள மேம்பாடு, மண் சேகரிக்க செயல் விளக்கம், மண் வளத்தை பாதுகாக்கும் தொழில்நுட்பம், உழவன் செயலியில் தமிழ் மண் வள மேம்பாடு, வேளாண் திட்டங்கள், மானியம் குறித்து ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர்கள் நந்தகுமார், திவ்யா, சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பெரமனுார் விவசாயிகள் பங்கேற்றனர்.
06-Dec-2024