ஜி.ெஹச்.,ல் மொபைல் திருடியவருக்கு காப்பு
சேலம்[ சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 4 ஆண்டு படிக்கும் மாணவி கோபிகா, 23. இவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள நிலையில், அங்கு கடந்த, 4ல், அவரது உயர்ரக மொபைல் போன் திருடு-போனது. அவர் புகார்படி மருத்துவமனை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வுக்கு உட்படுத்தி, சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் தெருவை சேர்ந்த தினேஷ், 31, என்பவரை கைது செய்தனர். அவரிடம், திருடிய மொபைல் போனை மீட்டனர்.