உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் இறங்கு முகத்தில் தங்கம் 2 நாளில் பவுனுக்கு 4,720 ரூபாய் சரிவு

சேலத்தில் இறங்கு முகத்தில் தங்கம் 2 நாளில் பவுனுக்கு 4,720 ரூபாய் சரிவு

சேலம், சேலத்தில் தங்கம் விலை, இரண்டு நாளில் பவுனுக்கு, 4,720 ரூபாய் சரிந்துள்ளது.சமீப நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே சென்றது. பவுன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. கடந்த, 20ல் தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், இரு நாட்களாக விலை குறைந்து வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் காலை, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 12,130 ரூபாய், பவுன், 97,040 ரூபாயாக இருந்தது. மதியம் கிராமுக்கு, 160, பவுனுக்கு, 1,280 ரூபாய் சரிந்தது. கிராம், 11,970 ரூபாய், பவுன், 95,760 ரூபாய்க்கு விற்றது. நேற்று மதியம் பவுனுக்கு, 320 ரூபாய் சரிந்த நிலையில், மாலையில் மேலும் பவுனுக்கு, 960 ரூபாய் குறைந்தது. அதன்படி கிராம், 11,540, பவுன், 92,320 ரூபாய்க்கு விற்றது. இதன்மூலம் தங்கம் விலை இரு நாளில் கிராமுக்கு, 590, பவுனுக்கு, 4,720 ரூபாய் சரிந்துள்ளது.அதேபோல் வெள்ளி கிராமுக்கு, 12 ரூபாய், கிலோவுக்கு, 12,000 ரூபாய் குறைந்து, கிராம், 172 ரூபாய், கிலோ, 1,72,000 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !