மேலும் செய்திகள்
அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது
18-Dec-2024
போலீஸ் செய்திகள்
28-Dec-2024
பனமரத்துப்பட்டி: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து அரசு டவுன் பஸ், மல்லுார் வழியே சேலம் நோக்கி நேற்று காலை, 11:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த வெள்ளையன், 42, ஓட்டினார். சேலம், லைன்மேட்டை சேர்ந்த ஜெயக்குமார், 43, கண்டக்டராக பணியில் இருந்தார்.மல்லுார் பழைய பாலம் அருகே, சாலை வளைவில் வந்த ஹூண்டாய் கார், பஸ்சின் பின்புறம் மோதியது. சத்தம் கேட்டு, சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு, டிரைவர், கண்டக்டர் இறங்கினர். சாலையில் நின்றபடி, கார் மோதியதில் பஸ் சேதமடைந்ததா என, இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே கனரக கிரேன் லாரி வந்த நிலையில், அதற்கும் பஸ்சுக்கும் இடையில் பஸ் டிரைவர், கண்டக்டர் சிக்கிக்கொண்டனர். கிரேன் நசுக்கியதால் ஜெயக்குமார், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வெள்ளையன் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிரேன் டிரைவர் விஜய்சிங், 41, என்பவரிடம், மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Dec-2024
28-Dec-2024