மேலும் செய்திகள்
அக் ஷய திரிதியை ஒட்டி புஷ்ப யாகம்
01-May-2025
சேலம்,சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழா கடந்த, ஏப்., 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக உற்சவர் சவுந்தரராஜருக்கு, பலவித மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்து ராஜ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து, 'கோவிந்தா... கோவிந்தா' கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள், தேரை முக்கிய வீதிகள் வழியே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.மதியம், 3:00 மணிக்கு மேல், சவுராஷ்டிரா கல்யாண மகாலில், சவுந்தரராஜர், தீர்த்தவாரி கண்டருளினார். இன்று காலை மண்டையடி உற்சவம், மாலை திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 6 இரவு சத்தாபரண ஊர்வலத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறும்.
01-May-2025