உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெளிநாடு செல்ல திட்டம் விபத்தில் பட்டதாரி பலி

வெளிநாடு செல்ல திட்டம் விபத்தில் பட்டதாரி பலி

கெங்கவல்லி, 'கெங்கவல்லி, உலிபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ஸ்ரீதர், 24. எம்.பி.ஏ., படித்த இவர், வெளிநாடு செல்வதற்கு, 'பாஸ்போர்ட்' எடுத்துள்ளார். அதன் நகல் உள்ளிட்ட தகவல்களை, கூரியரில் அனுப்ப, நேற்று முன்தினம், ஹெல்மெட் அணியாமல், 'யமஹா -ஆர்15' பைக்கில், தம்மம்பட்டி சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.இரவு, 7:45 மணிக்கு, தம்மம்பட்டி - முள்ளுக்குறிச்சி சாலையில் அதிவேகமாக சென்றபோது, சறுக்கி சாலையோரம் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, மக்கள் மீட்டு தம்மம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர், நேற்று உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை