மேலும் செய்திகள்
கணவர் மாயம்; மனைவி புகார்
13-May-2025
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே மேல் சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்த, தறித்தொழிலாளி சபரிகிரி வாசன், 22. இவரும், கீழ்சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்த பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கும் சவுமியா என்பவரும் காதலித்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் கடந்த, 4ல் வீட்டை விட்டு வெளியேறினர். மறுநாள், பவானி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் நேற்று தஞ்சம் அடைந்தனர். இருவரது உறவினர்களிடம் போலீசார் பேசியதில், சவுமியா பெற்றோர் சமாதானம் ஆகாததால், காதலனுடன் அனுப்பிவைத்தனர்.
13-May-2025